புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலுக் காக சுமார் ரூ.60,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறு வனம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதில் ஏறக்குறைய பாதித் தொகையை பாஜக செல விட்டு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தின் வேலூர் தவிர 542 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடந்தது. பாஜக மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமரானார்.
இந்நிலையில், சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
அதன்படி, நடந்து முடிந்த தேர் தலில் ஒரு வாக்குக்கு சராசரியாக 700 ரூபாய் வீதம் ஒரு தொகுதிக்கு சராசரியாக ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டதாக ஆய்வுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
நாட்டில் இதற்கு முன்னதாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் செலவிடப்பட்ட தொகை ரூ.30,000 கோடி என்றும் இந்தத் தேர்தலில் செலவு இரண்டு மடங் காகி இருப்பதாகவும் ஆய்வு தெரி விக்கிறது.
உலக அளவில் இந்தியத் தேர்தலே ஆகஅதிக செலவில் நடத்தப்பட்டு உள்ளதாகவும் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. தேர்தலுக்காக மொத்தம் செலவிடப்பட்டுள்ள ரூ.60,000 கோடியில் தேர்தல் ஆணையம் மட்டும் ரூ. 10,000 கேடி முதல் ரூ. 12,000 கேடி வரை செலவிட்ட தாக ஆய்வு கூறுகிறது.
மெத்தச் செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் தேர்தல் செலவு அதிகரித்துக்கொண்டே போவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என எச்சரித்துள்ள அந்த ஆய்வு, செல வுகளைக் குறைக்கும் வழிவகை கள் ஆராயப்பட வேண்டும் என் றும் ஆலோசனை கூறியது.
இந்த ஆண்டு தேர்தலின்போது இணையத்தில் அரசியல் கட்சி கள் போட்டிபோட்டுக்கொண்டு அதிகம் செலவிட்டன. இதிலும் பாஜகவே முதலிடம் பிடித்தது.

