பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே வலுக்கும் மோதல்

பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே வலுக்கும் மோதல்

2 mins read
Google News Preferred Icon

பாட்னா: முதல்வர் நிதிஷ்குமார் தங்கள் கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத் துள்ளது.

இந்த அழைப்பை நிதிஷ்குமார் ஏற்பாரா மாட்டாரா என்பது குறித்து பீகார் அரசியல் களத்தில் பரபரப் பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட் டன.

இதில் இரு கட்சிகளுமே அபார வெற்றி கண்டன.

இந்நிலையில், மத்திய அமைச் சரவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு ஓர் அமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், தன் கட்சி மத்திய அமைச்சரவையில் இடம்பெறாது என அறிவித்தார்.

இதையடுத்து பீகார் மாநிலத் தில் முதல்வர் நிதிஷ்குமார் தலை மையிலான அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு உரிய இடங்களை அளிக்காமல் பதிலடி கொடுக்கப் பட்டது.

இரு கட்சிகளும் தங்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லை என தொடர்ந்து கூறி வந்தாலும் எதிர்க்கட்சிகள் இதை நம்புவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தங்கள் கூட் டணியில் நிதிஷ்குமாரும் இடம் பெற வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் ரகுவன் பிரசாத் சிங் கூறியுள்ளார்.

நிதிஷ்குமார் தங்கள் பக்கம் வர நிறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"நிதிஷ்குமார் திரும்பி வந்தால் வரவேற்போம். அவர் எங்கள் அணிக்கு வரவேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்," என்று ரகுவன் பிரசாத் சிங் கூறியுள்ளார்.

இவர் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே இவர் அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நிதிஷ்குமார் மட்டு மின்றி பீகாரில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைமை மேலும் தெரிவித்துள்ளது.