தேர்தல் தோல்வி: முதல்வர், துணை முதல்வர் கருத்து மோதல்

தேர்தல் தோல்வி: முதல்வர், துணை முதல்வர் கருத்து மோதல்

1 mins read

ஜெய்ப்பூர்: மக்களவைத் தேர்தலில் தனது மகன் தோல்வி அடைந்ததற்கு துணை முதல்வர் சச்சின் பைலட் தான் பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ் தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர், துணை முதல்வர் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட் விலக வேண்டும் என சச்சின் பைலட் தரப்பு வலியுறுத்தி வருகிறது,

இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்

களிடம் பேசிய முதல்வர் கெலாட், தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள தோல்விக்கு துணை முதல்வர் சச்சின் பைலட் தான் பொறுப்பேற்க வேண்டும்," என்றார்.