சூரியனே இறங்கி வந்து சுட்டெரிப்பதைப் போன்ற நெருப்பு வெயிலும் உச்சக்கட்ட வெப்பமும் ராஜஸ்தான் மாநிலத்தை வாட்டி வதைத்து வருகின்றன. மேற்கு ராஜஸ்தானின் சுரு என்னும் பாலைவன நகரில் இவ்வாரத் தொடக்கத்தில் 50 டிகிரி செல் சியஸ் என்னும் வரலாறு காணா வெப்பம் நிலவியது. செவ்வாய்க் கிழமை அது சற்று தணிந்து 48 டிகிரியாக இருந்தது. குஜராத் மாநிலம் இதற்கு அடுத்த வெப்ப நிலையில் உள்ளது. அகமதாபாத் நகரிலிருந்து 85 கி. மீ. தொலை விலுள்ள சுரேந்திரநகர் மாவட்டத் தில் வெயிலின் கொடுமை தாங் காது 60 ஆடுகள் சுருண்டு விழுந்து மாண்டுவிட்டன. (படத் தில்) ரனாகாத் கிராமத்தில் நேற்று முன்தினம் இவ்வாறு மடிந்த தமது ஆடுகளைக் கண்டு மனம் கலங்கினார் ரனாபாய் என்னும் விவசாயி.
வெயிலின் கொடுமையால் வீழ்ந்து மடிந்த உயிர்கள்
1 mins read

