பயங்கரவாத அச்சுறுத்தல், திருட்டு: முக்கிய ரயில்நிலையங்களில் அதிகரிக்கும் பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்க ளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட உள்ளன.

மும்பை, டெல்லி, வாரணாசி, லக்னோ, கௌகாத்தி போன்ற ரயில் நிலையங்களுக்கு பயங் கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளது.

எனவே பாதுகாப்பை அதிகரிப் பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரயில்வே போலிஸ் படையின் பாதுகாப்புப் பிரிவு தலைமை அதிகாரி அருண்குமார் தெரிவித்து உள்ளார்.

‘ஐஏஎன்எஸ்’ செய்தி நிறு வனத்திடம் அவர் கூறுகையில், “இப்போதுள்ள பெரிய ரயில் நிலை யங்களில்கூட பாதுகாப்பு ஏற்பாடு கள் பலவீனமாக உள்ளன. ரயில் நிலையங்கள் திறந்த நிலையில் பலவழிகளைக் கொண்டதாக உள்ளன. யார் வேண்டுமானாலும் எப்பகுதியில் இருந்தும் ரயில் நிலையத்திற்குள் எளிதாக நுழைந்துவிடலாம்.

“பயங்கரவாதத் தாக்குதலுக்கு இடம் கொடுக்கும் வகையில் இவை அமைந்துள்ளன. எனவே எல்லா வழிகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு நுழைவு வழி மட்டும் இருக்கும் வகையில் பெரும்பாலான முக்கிய ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப் படும். ரயில் நிலையங்களுக்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.

“நுழைவு வாயில் ‘ஸ்கேனிங்’ முறை மேம்படுத்தப்படும். அதிரடி படை வீரர்கள் ரயில் நிலையங் களைச் சுற்றி வருவார்கள். இந்த பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே 114.18 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

“இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிர்களை மட்டு மல்ல உடைமைகளையும் பாது காக்க முடியும். குறிப்பாக, ரயில்வே துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வரும் திருட்டை கட்டுப்படுத்த முடியும்,” என்றார் அருண்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!