நடுத்தர வயதுப் பெண்களைக் குறிவைத்து கொல்லும் 'கிறுக்கன்'

நடுத்தர வயதுப் பெண்களைக் குறிவைத்து கொல்லும் 'கிறுக்கன்'

2 mins read

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தையே குலைநடுங்கச் செய்த பாலியல் கிறுக்கன் போலிசிடம் வசமாக சிச்கியுள்ளான்.

அண்மையில் கோவாரா கிராமத்தில் புதுல் மாஜி என்னும் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலிசார் தீவிர தேடலுக்குப் பின் கமாரு ஜமான் சர்க்கார், 42, என்பவனை கைது செய்தனர். 12 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ன.

பிற்பகல் வேளையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொலை செய்வதில் அவன் ஈடுபட்டு வந்துள்ளான். பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த அவன், சிவப்பு நிற தலைக்கவசத் துடனும் சிறப்பு நிற மோட்டார் சைக்கிளுடனும் செல்வது வழக் கம்.

திட்டமிட்ட வீட்டுக்கு சென்று மின்சாரக் கணக்கு எடுக்கவேண் டும் என்று உள்ளே நுழைவான். பின்னர் அங்கிருக்கும் பெண் ணைக் கடுமையாகத் தாக்கி சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரிப்பான். பின்னர் இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்வான்.

இதே பாணியில் புதுல் மாஜி உள்ளிட்ட ஐந்து பெண்களைக் கொன்றுள்ளதாக கிழக்கு பர் தமான் பகுதி காவல்துறை கண் காணிப்பாளர் பாஸ்கர் முகோ பாத்யாய் தெரிவித்தார். பெண் ணின் மூச்சு நின்றுவிட்டதை உறுதி செய்ததும் வீட்டில் இருக் கும் நகை, பணம் உள்ளிட்ட வற்றைத் திருடிச் செல்வான்.

கொள்ளையடிப்பதைக் காட்டி லும் பெண்களைக் கொலை செய் வதே அவனது திட்டம் என்றும் பெண்களால் ஏதோ ஒரு வகை யில் பாதிக்கப்பட்ட சைக்கோ அவன் என்றும் போலிஸ் அதி காரி கூறினார்.

குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடுத்தர வயதுப் பெண்களைக் குறிவைத்து கொலை செய்து வந்துள்ளான். சில பெண்க ள் படுகாயங்களுடன் அவனி டமிருந்து தந்திரமாகத் தப்பி உள்ளனர்.