மின்னணு வாக்குப்பதிவை புகார் கூறுபவர்களைத் தண்டிக்க விதிமுறை மறுபரிசீலனை

மின்னணு வாக்குப்பதிவை புகார் கூறுபவர்களைத் தண்டிக்க விதிமுறை மறுபரிசீலனை

1 mins read

கோவை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆதாரமற்ற புகார்களைக் கூறும் வாக்காளர்களைத் தண்டிக்க வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தத் தண்டனை விதிமுறை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட விதிமுறை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.