புதுடெல்லி: நாட்டின் பல்வேறு துறைகளையும் வளர்ச்சிப் பாதை யில் கொண்டு செல்ல ஏதுவாக 8 மத்திய அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம்பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன்மூலம் மத்திய அமைச்சர வையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் அமித்ஷா. அதே வேளையில் கடந்த ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி 6 குழுக்களிலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களிலும் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ராஜ்நாத்சிங் பொருளா தார விவகாரங்கள் மற்றும் பாது காப்பு தொடர்பான குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
மிக முக்கிய குழு என்று கருதப் படும் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டியில் அவர் சேர்க்கப்பட வில்லை. மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அமைச்சரவைக் குழுக்களின் கூட்டம் நடைபெறும் போது சிறப்பு அழைப்பாளராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சராக மட்டு மல்லாமல், 8 அமைச்சரவைக் குழுக் களிலும் இடம்பெற்றதன் மூலம் பார திய ஜனதாவிலும் மத்திய அரசிலும் மோடிக்கு அடுத்தபடியாக அமித்ஷா வுக்குதான் அதிகாரம் உள்ளது என்பது தற்போது நிரூபணமாகி உள்ளதாக அரசியல் கவனிப்பா ளர்கள் பலரும் கருத்து தெரிவித் துள்ளனர்.

