ரூ.15 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைப் பணிகள்

ரூ.15 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைப் பணிகள்

2 mins read

புதுடெல்லி: நெடுஞ்சாலைத் துறைக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த 5 ஆண்டு களில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங் கள் மேற்கொள்ளப்படும் என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய செயல் திட்டத்தில் 72 பசுமை வழிச்சாலைகளும் இடம்பெற்றுள்ள தாக அவர் கூறினார்.

தற்போது 20 முதல் 25 நெடுஞ் சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடப்பது ஆய்வின் வழி தெரிய வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அத்திட்டங்களை அடுத்த 100 நாட்களுக்குள் முடிக்க வேண் டும் என இலக்கு நிர்ணயித்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

"கடந்த 2014ஆம் ஆண்டு நான் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபோது 403 நெடுஞ் சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தன. அவற்றுள் பெரும்பாலான வற்றை முடித்திருப்பதால் வங்கிக ளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் பணம் மிச்சமாகியுள்ளது. விழுந்து கிடந்த நெடுஞ்சாலைத் துறையை நிமிர்த்தி உள்ளோம்.

"நெடுஞ்சாலைப் பணிகளில் நாளொன்றுக்கு 32 கிலோ மீட்டர் தூரத்துக்கான சாலைகள் அமைக் கும் பணி நடந்து வருகிறது. இதை நாளொன்றுக்கு 40 கிலோ மீட்டராக உயர்த்தத் திட்டமிட்டுள் ளோம்," என்று அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

முந்தைய 5 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறை வேற்றப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு ருபாய் ஊழலுக்கு கூட இடம் தராமல் அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகப் பெருமையு டன் தெரிவித்தார்.

"கட்சி அரசியல், சாதி, இன, வகுப்புவாத அரசியல் ஆகிய வற்றைக் கடந்து நாட்டு மக்கள் தேர்தலில் தீர்ப்பளித்துள்ளனர். தங்களுக்கு வளர்ச்சிதான் தேவை என்பதை மக்கள் உறுதி செய்துள் ளனர். நாங்களும் வளர்ச்சிக்குத் தான் முன்னுரிமை அளிக்கிறோம்," என்றார் நிதின் கட்காரி.