ஆய்வு: கேளராவில் புதிய விலங்கினங்கள் அதிகம் கண்டுபிடிப்பு

இந்தியாவில் 224 புதிய தாவர இனங்களும் 372 விலங்கு இனங்களும்  கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்கள் இந்தியாவின் தாவரவியல், விலங்கியல் கருத்தாய்வுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட  தாவர இனங்களில் 31 விழுக்காடு இமய மலைத்தொடரில் வாழ்கின்றன. புதிய விலங்குகளில் 50 விழுக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளில் காணப்படாத மிக அரிய விலங்குகள் இங்கு இருப்பதாக விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விலங்கினங்கள் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் கேரளா என்கின்றனர் ஆய்வாளர்கள் இந்தப் புதிய கண்டுபிடிப்புகளின் சேர்க்கையால் இந்தியாவிலுள்ள மொத்த விலங்கு இனங்களின் எண்ணிக்கை 101,681 க்கு உயர்ந்துள்ளது. உலகிலுள்ள  அனைத்து விலங்கு இனங்களின் எண்ணிக்கையில் இது 6.49 விழுக்காடாக உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon