ஒரே டம்ளரில் ஐந்து வித சுவையுடன் காப்பி

கோயமுத்தூர்: துடியலூரை அடுத்த கணுவாயைச் சேர்ந்தவர் மாணிக்கம், 56, ஒரே டம்ளரில் ஐந்து வித சுவையுடன் காப்பி தயாரித்துக் கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார்.

அங்குள்ள காப்பிக்கடையில் சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார் மாணிக்கம். விதவிதமாக தேநீர் தயாரிக்க வீட்டில் முயற்சி செய்தார். அதன்படி, ஒரே டம்ளரில் பால் தனியாகவும் கடுந்தேநீர் தனியாகவும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்கும் வகையில் தேநீர் தயாரிப்பதில் வெற்றி கண்டார். இதையடுத்து அவர் ஒரே டம்ளரில் தேநீர், பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ், கடுங்காப்பி ஆகிய 5 சுவைகளில் காப்பி தயாரித்து வருகிறார்.

இந்த முயற்சியில் வெற்றி பெற்றதையடுத்து, சொந்தமாக கடை திறந்துள்ளார். ஒரே டம்ளரில் 5 வித சுவையுடன் அவர் போடும் காப்பியை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பி குடித்துச் செல்கின்றனர். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon