117 டிகிரியை எட்டிய வெயில்; வடமாநிலங்களில் 22 பேர் பலி

நாக்பூர்: இந்தியாவின் வட மாநி லங்களில் சுட்டெரிக்கும் வெயில் தாங்க முடியாமல் 22 பேர் உயிர் இழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சுரு பகுதியில் நாட்டின் அதிகபட்ச மாக 118.4 டிகிரி வெயில் பதிவா னது.

அதற்கு அடுத்தபடியாக மகா ராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத் தில் 116.96 டிகிரி என கொளுத்திய வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடைகாலத்தில் நாக்பூரில் நேற்றுமுன்தினம் மூன் றாவது முறையாக வெயில் 116 டிகிரியைத் தாண்டியது.

குறிப்பாக நாக்பூரின் விதர்பா மண்டலத்தில் வெயிலின் கொடுமை உக்கிரமாக உள்ளது.

வெயிலின் தாக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர் கள் சாலையோரம் வசித்து வந்த வர்கள் என்பதால் அவர்களை அடையாளம் கண்டு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவது சவாலாக உள்ளதாகவும் போலிசார் கூறினார்.

இதே போல் மத்தியப் பிரதேசத் திலும் கடந்த மூன்று நாட்களில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மூவர் உயிரிழந்துவிட்ட னர்.

மத்தியப்பிரதேசத்தில் பொது வாக 113 டிகிரி வெயில் வாட்டிய போதும் டமோ, கர்கோனே போன்ற ஒரு சில மாவட்டங்களில் 116.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

கொளுத்தும் வெயிலுக்கு உத்தரப்பிரதேசத்திலும் ஏழு பேர் பலியாகினர்.

மேலும் கடும் வெயில் காரண மாக பல மாநிலங்கள் மோசமான வறட்சியில் வாடுகின்றன.

இந்நிலையில் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள சங்கர்கர் பகுதியில் கடும் தண்ணீர் பற்றாக் குறை நிலவுவதால், மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர்.

வடமாநிலங்களின் சில பகுதி களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிகக்கடுமையான வெயில் சுட் டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!