பெங்களூரு: கர்நாடகாவில் எந்த நேரத்திலும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக அம்மாநில முதலமைச்சரான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆளும் காங்கிரஸ்--=மஜத கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் தங்களது ஆதரவுகளைத் திரும்பப் பெற்று பாஜகவின் பக்கம் செல்லவுள்ளதாகக் கூறப்
படும் நிலையில், அம்மாநிலத் தில் ஆட்சி கவிழலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக நிகில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்தல்
வருமா அல்லது இரண்டாண்டு கள் கழித்துத் தேர்தல் வருமா என்பது குறித்தெல்லாம் தனக்குத் தெரியாது எனக் கூறிய அவர், தேர்தலுக்கு இப்பொழுதிலிருந்தே தொண்டர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் குமாரசாமி மகனின் சூசகமான இந்தப் பேச்சு மாநில அரசியலில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

