ஜெகன் அதிரடி: ஆந்திராவிற்கு ஐந்து துணை முதல்வர்கள்

அமராவதி: ஐந்து துணை முதல்வர் களை நியமிக்கும் முடிவுதான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் (படம்) அடுத்த அதிரடி அறிவிப்பு.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிவிப்புகள், புதிய திட்டங் கள் என பல அதிரடி நடவடிக்கை களை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன்.

இந்நிலையில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்று நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங் கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் அமைச்சரவையின் விரி வாக்கம் தொடர்பில் ஆந்திர மாநி லத்திற்கு 5 துணை முதல்வர்களை நியமிக்க அவர் முடிவு செய்துள் ளார்.

அதன்படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்பட்ட சமூகத் தினர், சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகியவற்றுக்கு 5 துணை முதல்வர்கள் பதவி வழங்கப்படுகி றது.

மேலும் இவர்கள் ஆந்திராவின் ஐந்து முக்கிய பகுதிகளான ராயலசீமா, பிரகாசம், கிருஷ்ணா டெல்டா, கோதாவரி, வைஷாக் ஆகியவற்றின் பிரதிநிதிகளாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகி றது.

“மக்கள் நம் செயல்பாடுகளை உன்னிப்பாகப் பார்க்கின்றனர். நாம் அவர்களுக்கு முந்தைய அர சுக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்குமான வேறுபாட்டைக் காட்ட வேண்டும்,” என்று கூறி உள்ளார் ஜெகன்மோகன்

இன்று நடைபெறும் பொது நிகழ்ச்சியில் புதிய துணை முதல் வர்கள் உட்பட 25 பேர் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநி லமான உத்தரப் பிரதேசத்திலேயே 2 துணை முதல்வர்கள் மட்டும் உள்ள நிலையில், ஜெகன் மோகனின் இந்த அதிரடி நட வடிக்கையைக் கண்டு பல மாநில முதல்வர்கள் வியந்து போய் உள்ள னர்.

மாநில அரசு அறிவிக்கும் திட் டங்கள் அனைத்தும் ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடையும் வகை யில் முதல்வர் ஜெகன் இத்தகைய நடவடிக்கையை எடுத்து உள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!