உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயல், மின்னலுக்கு 19 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயல், மின்னலுக்கு 19 பேர் பலி

1 mins read

புவனேஸ்வர்: உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வீசிய புழுதிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புழுதிப் புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதில் 8 கால்நடைகளும் உயிரிழந்தன.

நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாநில அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.