பொறியாளரைத் தோப்புக்கரணம் போட வைத்ததற்கு மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ

பொறியாளரைத் தோப்புக்கரணம் போட வைத்ததற்கு மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ

1 mins read

புவனேஸ்வர்: ஒடிசாவில் பிஜு ஜனதா தள எம்எல்ஏ சரோஜ் குமார் மெஹர் சாலை சரியில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டையடுத்து பொது இடத்தில் வைத்து அரசு பொறியாளரைத் தோப்புக்கரணம் போட வைத்த காணொளி வெளியானது.

இக்காணொளி பரவியதையடுத்து, மேலிடத்திற்கு விளக்கம் அளித்த எம்எல்ஏ சரோஜ் குமார், மக்கள் கோபத் தில் இருந்ததாகவும், அவர்கள் உதவி பொறியாளரைத் தாக்கும்முன் தான் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் கூறியதோடு மன்னிப்பும் கேட்டார்.