மகனுடன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பெண்

மகனுடன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பெண்

1 mins read
Google News Preferred Icon

அம்பாசா: திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ஷியாமளி தேவி சக்மா. இவரது மகன் குணமோய் சக்மா. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்த ஆண்டு 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாகச் சிறு வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திய ‌ஷியாமளி தேவி, இப்போது தன் மகனுடன் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வயதானாலும் விடாமுயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்ற தாய்க்கு, கிழக்குத் திரிபுரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.