திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்குச் வேட்டி அணிந்து பாரம்பரிய முறைப்படி சென்ற பிரதமர் மோடி துலாபாரமாக எடைக்கு எடை தாமரை மலர்களை வழங்கி வழிபாடு நடத்தினார்.
பிரதமர் மோடி நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்தார். அங்கு இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு வந்தார்.
கோயில் ஓய்வறைக்குச் சென்ற அவர் கோயில் சம்பிரதாயப்படி வேட்டி அணிந்தார். பின்னர் கோயிலுக்குச் சென்ற அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். கோயில் சார்பில் அவருக்குப் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் கோயிலுக்குத் துலாபாரமாக, எடைக்கு எடை தாமரை மலர்களை அளித்தார்.
பின்னர் கதலி பழம், நெய் காசு உட்பட மொத்தம் 40,000 ரூபாய் மதிப்பில் கோயிலுக்கு நேர்த்தி கடன்களைச் செய்தார்.

