சுடச் சுடச் செய்திகள்

ராகுல்: பாதிக்கப்பட்டவர்களைக்  காப்பது காங்கிரஸ் கடமை

மலப்புரம்: பிரதமர் மோடியாலும் அவரது கொள்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாக அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மைய தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் அங்கு வருகை தந்தார். களிக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் வலம் வந்தபடி அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது வயநாடு மக்களின் பிரச்சினைகளுக்காக மக்களவைக்கு உள்ளேயும் வெளியேயும் தாம் குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டார். “பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடையே வெறுப்பு உணர்வைப் பரப்பி வருகிறது. அதை அன்பாலும் பாசத்தாலும் எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதை காங்கிரஸ் புரிந்து வைத்துள்ளது,” என்றார் ராகுல்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon