தேர்தலின் போது பாஜக செலவிட்ட ரூ.28 ஆயிரம் கோடி குறித்து காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மக்களவைத் தேர்த லின் போது பாரதிய ஜனதா கட்சி செலவிட்ட பெருந்தொகை எங்கிருந்து வந்தது? என காங் கிரஸ் கட்சியின் மூத்த தலை வர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குரிய விவரங்களைத் தர பாஜக தலைமை தயாரா? என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்த்து ரூ.60 ஆயிரம் கோடி செலவிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இதில் பாஜக மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினரான அபிஷேக் மனு­ சிங்வி, ‘ஊடக ஆய்வுகள் மையம்’ வெளியிட்ட தரவுகளின்­படி, தேர்தலையொட்டி செலவிடப் பட்ட தொகைகளில் பாஜக மட்டும் ஏறத்தாழ 48 விழுக்காடு செலவிட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.

“இந்தத் தேர்தலில் பாஜக செலவிட்ட தொகை நாட்டின் கல்வி பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பங்காகும். சுகாதாரப் பட்ஜெட்டில் 43 விழுக்காடு, பாதுகாப்பு பட்ஜெட்டில் பத்து விழுக்காடு ஆகும்,” என்றார் அபிஷேக் மனு சிங்வி.

தேர்தல் என்பது நியாயமாக நடக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் சரிசம வாய்ப்பு கள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தி யாவின் ஜனநாயகம் என்பது சுதந்திரமான நியாயமான தேர் தலை நம்பியுள்ளது என்றார்.

“இது சாத்தியமாக வேண்டு மெனில் அனைவருக்கும் சரிசம வாய்ப்பு என்பதும் சாத்தியமாக வேண்டும். அதாவது அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

“இந்தத் தேர்தல் செலவுத் தொகையில் பெரும்பங்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததா?” என்றும் அபிஷேக் சிங்கி கேள்வி எழுப்பினார். நடந்து முடிந்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறை கேடு நடந்திருப்பதாகவும், அது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சிகள் பலவும் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளன என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!