ஸ்ரீநகர்: தமது இந்தியப் பிரிவுக்கு புதிய தலைவரை நியமித்துள்ளதாக அல்காய்தா பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள 11 நிமிட காணொளிப் பதிவு ஒன்றில் இத்தகவலை விவ ரித்துள்ளார் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹஃபீசா உல்லா.
முன்னதாக அல்காய்தா இந்தியப் பிரிவுக்குத் தலைமை ஏற்றிருந்த ஸாகீர் மூசா, கடந்த மே 23ஆம் தேதி இந்திய விமானப்படை நடத்திய தாக்கு தலில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து தகுந்த பதிலடி கொடுத்தது இந்தியா. அப்போது காஷ்மீர் ஆக்கிரமிப்புப் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஏராளமான தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஹமீத் லெல் ஹாரி எனும் ஹாருன் அப்பாஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள் ளார் என்றும், இவருக்கு அடுத்த நிலையில் காசி இப்ராஹிம் காலிட் துணைத் தலைவராக பொறுப்பேற்ப தாகவும் அல்காய்தா அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டுதான் அல்காய்தா இந்தியப் பிரிவுக்குத் தலைவராக பொறுப்பேற்றார் மூசா. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹமீத் லெல் ஹாரி 30 வயதானவர் என்றும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
கூலித் தொழிலாளியாகவும் சமையல்காரராகவும் பகுதி நேர வேலைகளைச் செய்து வந்த இவர் புல்வாமாவில் வசித்துள்ளார்.
இந்திய உள்துறையால் தேடப் படும் பயங்கவாதிகளின் பட்டிய லில் முதல் பத்து இடங்களுக்குள் ஹமீத் லெல் ஹாரியின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அவர், இப்பட்டியலில் இடம்பெறு வார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குத லுக்குத் திட்டமிட்டிருந்த ஆறு பேர் கைதாகி உள்ளனர். அவர் கள் அனைவருமே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் ஹிஸ்புல் முஜாகி தீன் அமைப் புடனும் நேரடி தொடர் பில் இருந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

