பேச்சுவார்த்தைக்குத் தயார்: மோடிக்கு இம்ரான்கான் கடிதம் 

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விவ காரங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்க ருக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரே‌ஷி கடிதம் வழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ் விரு கடிதங்களும் இஸ்லாமா பாத்தில் உள்ள இந்திய தூதரகத்­தில் இந்த வார முற்பகுதியில் ஒப்ப டைக்கப்பட்டதாக தகவல் வெளி யாகி உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட் டின் போது இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே தனிப்பட்ட சந்திப்பு நிகழ வாய்ப்பில்லை என இந்தியா அண்மையில் அறிவித் தது. இதையடுத்தே பாகிஸ்தான் பிரதமர் உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்ப தாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவும் நிலையில், பேச்சுவார்த்தை மட் டுமே இரு தரப்புக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என தமது கடிதத்தில் இம்ரான் கான் குறிப் பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு தமது வாழ்த் துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் வாழ்த்து தெரிவித்து எழுதப்பட்டுள்ள இரு கடிதங்களுக்கும் இந்திய தரப்பில் இருந்து இன்னும் பதில் அளிக் கப்படவில்லை.

கடந்த இரு வாரங்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே யான உறவில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த 1ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தி னர்களை மிரட்டுவது போன்று பாகிஸ்தான் போலிசார் நடந்து கொண்டதாக இந்திய தரப்பு புகார் எழுப்பியது.

அதே போல் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்விலும், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்விலும் பங்கேற்ற விருந்தினர்களை மிரட்டும் வகை யில் இந்திய பாதுகாப்பு முகாம்கள் கள் நடந்துகொண்டதாக பாகிஸ்தான் தரப்பும் பதிலுக்குச் சாடியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!