இலங்கை மீண்டும் உயிர்த்தெழும்: மோடி நம்பிக்கை

இலங்கை மீண்டும் உயிர்த்தெழும்: மோடி நம்பிக்கை

3 mins read
8196c910-6e7e-4c0a-9028-26304f800378
படம்: இலங்கை அரசாங்கத்தின் தகவல் துறை -

மாலத் தீவு பயணம் முடிந்து நாடு திரும்பும் வழியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை சென்றார். தலைநகர் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவரை வரவேற்றார்.

பிரதமர் மோடியை வரவேற்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் அலுவலகத்திற்கு முன்பாக சிவப்புக் கம்பளம் விரித்து இலங்கை ராணுவ அணி வகுப்பு காத்துக்கொண்டிருந்தது.

இருப்பினும், அதிபர்

சிறிசேனவின் அலுவலகத்துக்கு இந்தியப் பேராளர்களுடன் சென்று கொண்டிருந்த பிரதமர் மோடி, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புனித அந்தோணியார் தேவாலயத் துக்குச் சென்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்களில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த தேவாலயங்களில் இந்த புனித அந்தோணியார் தேவாலயமும் ஒன்று.

பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தபோது அங்கு நடந்து கொண்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் மாண்டனர்.

புனித அந்தோணியார் தேவாலயத்தில் தாம் இருக்கும் புகைப்படங்களைப் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

"இலங்கை மீண்டும் உயிர்த் தெழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்களால் இலங்கையைத் தோற்கடிக்க முடியாது. இலங்கை நாட்டவருக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது," என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நட்பு நாடுகளாக இலங்கையும் மாலத் தீவும் இருந்து வருகின்றன. ஆனால் 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்தபோது சீனாவின் நட்புக் கரத்தை இலங்கை நாடியது.

அரசியல், நிதி ஆதரவுக்கு சீனாவின் பக்கம் அன்றைய அதிபர் ராஜபக்சேயின் பார்வை திரும்பியது.

அதேபோல 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை மாலத் தீவின் அதிபராக அப்துல்லா யாஸ்மீன் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மாலத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் அப்துல்லா யாஸ்மீன் தோற்றார்.

மாலத் தீவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற இப்ராஹிம் முகம்மது சோலியின் நிர்வாகத்தின்கீழ் இந்தியாவுடனான நட்புறவு மீண்டும் மலர்ந்தது.

இலங்கை அதிபராக சிறிசேன பதவியேற்ற பிறகு இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடி வரு கிறது. இந்தியாவுடனும் ஜப்பானு டனும் இணைந்து ஆழ்கடல் கொள்கலன் முனையத்தை மேம்படுத்தப்போவதாக இலங்கை கடந்த மாதம் அறிவித்தது.

இந்தப் புதிய முனையம் சீனாவால் நிர்வகிக்கப்படும் சர்ச்சைக்குரிய முனையத்துக்கு அருகில் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்தப் படும் விதம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களிடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

புலன்விசாரணைக்கு இடை யூறு விளைவிக்க வேண்டாம் என்று இலங்கை நாடாளுமன்றம் அதிபர் சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத மிரட்டல் இருக்கிறது என்று தெரிந்தும் அதிபர் சிறிசேன தகுந்த நடவடிக்கை எடுக்க

வில்லை என்று தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த சிசிரா மென்டிஸ் தெரிவித்ததை அடுத்து, விசாரணைக்கு அதிபர் சிறிசேன எதிர்ப்பு தெரிவித்தார்.

"புலன்விசாரணைக் குழு அழைத்தால் அரசாங்க ஊழியர் உடனடியாக சென்று சாட்சியம் அளிக்க வேண்டும். கடமையாற்ற தவறினால் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்," என்று அதிபர் சிறிசேனவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்ற நாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலில் மாண்டோருக்குப் புனித அந்தோணியார் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடமிருந்து மூன்றாவது). அவருக்குப் பக்கத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, கொழும்பின் பேராயர் மெல்கம் ரஞ்சித்.