பிறந்த குழந்தையாக ராகுல்: நினைவுகூர்ந்த ராஜம்மா

பிறந்த குழந்தையாக ராகுல்: நினைவுகூர்ந்த ராஜம்மா

1 mins read
4430125c-5755-4458-ad5c-22ec8038e825
பிறந்தவுடன் தம்மை கைகளில் ஏந்திய ராஜம்மாவுடன் ராகுல். படம்: இந்திய ஊடகம் -

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் வயநாட்டுக்குச் சென்றார். சாலையில் பேரணியாகச் சென்ற ராகுல் காந்திக்கு, வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரணிக்கு இடையில் ராகுல் காந்தி பிறக்கும்போது உடன் இருந்த செவிலியர் ராஜம்மாவை நேரில் சென்று சந்தித்தார்.

1970 ஜூன் 19ஆம் தேதி டெல்லி ஹோலிகிராஸ் மருத்துவமனையில் ராகுல் பிறந்தார். அப்போது, செவிலியர் ராஜம்மாவும் உடனிருந்துள்ளார். அதனை அறிந்த ராகுல் நேற்று ராஜம்மா இல்லத்துக்குச் சென்று அவரிடம் தமது அன்பை வெளிப்படுத்தினார்.

ராகுலின் சந்திப்பு குறித்து தெரிவித்த ராஜம்மா, "நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ராகுல் பிறந்தவுடன் அவரை கைகளில் ஏந்திய சிலரில் நானும் ஒருத்தி. ராகுலைப் பார்த்தவுடன் பழைய நினைவுகள் வந்தன. அவருக்கு ஏதேனும் பரிசு அளிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், நானே செய்த பலகாரங்களை அவருக்கு அளித்தேன்," என்றார்.