புதுடெல்லி: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமான பயண பாதுகாப்புக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜூலை 1 முதல் உள்நாட்டு பயணிகளுக்கான பாதுகாப்புக் கட்டணம் ரூ.130லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது.
வெளிநாட்டு பயணிகளுக்கு 3.25 டாலரிலிருந்து 4.85 டால ராக அதிகரிக்கிறது. இக்கட்டண உயர்வால் உள்ளூர் மற்றம் அனைத்துலக விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரக்கூடும் என கூறப்படுகிறது.

