புதிய தலைவரை முடிவுசெய்ய பாஜக நிர்வாகிகள்ஒன்றுகூடல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பாஜக மாநிலத் தலைவர்களையும் முக்கிய பாஜக பிரமுகர்களையும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சந்திக்க இருக்கிறார்.

வரும் வியாழன், வெள்ளி (ஜூன் 13, ஜூன் 14) ஆகிய இரு நாட்களும் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. 

மக்களவைத் தேர்தல் நடந்ததால் பாஜகவின் அமைப்பு தேர்தல் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அமைப்புத் தேர்தலை நடத்த பாஜக தயாராகி வருகிறது.

குறிப்பாக, கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் அமித் ஷா மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் அவருக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இந்த அமைப்புத் தேர்தல் அவசியம். 

அது பற்றி இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்.

பாஜக தோல்வியுற்ற இடங்களில் அதற்கான காரணங்களை இந்தக் கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கட்சித் தலைமை கேட்டறியும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon