ஓடும் ரயிலில் உடற்பிடிப்பு வசதி அறிமுகம்

ஓடும் ரயிலில் உடற்பிடிப்பு வசதி அறிமுகம்

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக பல்வேறு புதுப்புது வசதிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரலாற்றில் முதல்முறையாக, ஓடும் ரயிலில் மசாஜ் (உடற்பிடிப்பு) சேவையை அறிமுகப்படுத்த அது திட்டமிட்டுஉள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ரயிலில் மசாஜ் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அதனை பரிசீலனை செய்த ரயில்வே பயணிகளுக்கு மசாஜ் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தூரிலிருந்து புறப்படும் 39 ரயில் களில் இந்த வசதி கிடைக்கும். குறிப்பாக, டேராடூன்-இந்தூர், புதுடெல்லி-இந்தூர், இந்தூர்-அமிர்தசரஸ் போன்ற விரைவு ரயில்களில் மசாஜ் வசதி அறிமுகம் செய்யப்படும்," என்றனர்.