புதுவை முன்னாள் முதல்வர் மரணம்

புதுவை முன்னாள் முதல்வர் மரணம்

1 mins read

புதுவை: புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்நலக் குறைவால் காலமானார். திமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை புதுவை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். அங்குள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.