புதுடெல்லி: நாட்டின் தலைநகரான புதுடெல்லியை பாதுகாக்கும் வகை யில் அமெரிக்காவிடம் இருந்து வான் வழித் தாக்கும் ஏவுகணை களை வாங்க இந்தியா முடிவு செய் துள்ளது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அன்னிய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு இந்த ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த விற்பனையை உறுதி செய்யும் வகையில் இறுதிக்கட்ட மசோதா ஒன்று அமெரிக்க அரசால் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்ட பிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஏவுகணைகள் இந்தியாவிடம் படிப்படியாக ஒப்படைக்கப்படும் என்றும் தெரிகிறது.
ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட பின்னர், இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குள் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கெனவே ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் ஏவுகணை களும், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட ஏவுகணைகளும் தலைநகர் புதுடெல்லியின் பாதுகாப்பு அரண் களாக உள்ளன.
அவற்றுடன் அமெரிக்கா வழங்க உள்ள இந்தப் புதிய நவீன ஆயுதங்களும் இணைக்கப்படும் என இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப் பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் தலைநகருக்கு அதி உயர் பாது காப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.
இது பெருமைபடத்தக்க விஷ யம் என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.

