பிரதமரிடமோ, மத்திய அரசிடமோ உதவிகள் ஏதும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராகுல்

வயநாடு: பாஜகவினர் வெறுப்புணர் வாலும் கோபத்தாலும் கண் மூடித்தனமாகச் செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கேரளாவில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், பாஜகவினரின் இத்தகைய போக்கை அனைவரும் எதிர்த்து நின்று போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

பாஜக ஆளும் மாநிலங்கள், அக்கட்சியின் ஆட்சி இல்லாத மாநிலங்கள் எனப் பிரித்துப் பார்த்து பிரதமர் மோடி செயல்படுவ தாக ராகுல் குற்றம் சாட்டினார். 

உத்தரபிரதேசத்தை நடத்துவது போல்  மோடி ஒருபோதும் கேர ளாவை நடத்தமாட்டார் என்று குறிப்பிட்ட ராகுல், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடப்பதால் இந்த உண் மையைத் தாம் அறிந்திருப்பதாகக் கூறினார்.

“பாஜக ஆட்சி செய்யாத மாநி லங்களைப் பிரதமர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார். வயநாடு தொகுதி மற்றும் கேரளாவின் வளர்ச்சிக்குப் பிரத மர் மோடியிடமிருந்தோ, பாஜக தலைமையிலான மத்திய அரசிடமி ருந்தோ எந்தவித ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கவில்லை. 

“காங்கிரசுக்கும் இடதுசாரிக ளுக்கும் இடையே கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு இரு கட்சிகளுமே வயநாடு தொகுதியின் முன்னேற்றத்துக் காகப் பாடுபட வேண்டும்,” என்று ராகுல் வலியுறுத்தினார். 

முன்னதாக கடந்த சனிக் கிழமையன்று குருவாயூரில் செய்தி யாளர்களிடம் பேசிய மோடி, கேரளாவும் தமக்கு வாரணாசி போன்று  மிகவும் நெருக்கமானது என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்திரா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான தொகுதி எனக் கருதப்படும் அமேதி மக்களவைத் தொகுதியில் இம்முறை ராகுலுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

எனினும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் மீண்டும் அங்கு சென்று, சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon