தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாலத் தீவு அருகே உருவாகியுள்ள 'வாயு' புயல் குஜராத்தில் கரையைக் கடக்கலாம்

1 mins read
cbce6937-e0ae-42da-b214-a5a2f8f09834
-

அரபிக்கடலின் தென் கிழக்குப் பகுதியில் 'வாயு' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் நாளை மறுநாள் குஜராத் மாநிலம் போர்பந்தருக்கும் மகுவாக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மணிக்கு 130 கி.மீ. முதல் 140 கி.மீ.வரை காற்றின் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள 'வாயு' புயல், நிலப் பகுதியை விட, கடல் பகுதிக்கே அதிக மழை தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.