பெங்களூரு: யானை கூட்டம் ஒன்று இறந்து போன குட்டியைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் சென்ற காணொளி வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எடுத்த காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், யானை ஒன்று இறந்து போன குட்டியைத் துதிக்கையால் தூக்கியபடி சாலையைக் கடந்து நிற்கிறது. சில நொடிகள் கண்ணீருடன் காத்திருந்த வேளையில் அதன் பின்னால் 3 குட்டிகளுடன் மேலும் சில யானைகள் வந்து சாலையில் குழுமி நிற்கின்றன.
இறுதியாக மூத்த யானை இறந்த குட்டியைத் தூக்கிக் கொண்டு வனத்திற்குள் செல்கிறது. சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகப் பிரவீன் கஸ்வான் தெரிவித்துள்ளார்.