காணாமற்போன விமானம் நொறுங்கியது

காணாமற்போன விமானம் நொறுங்கியது

1 mins read

இடாநகர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3ஆம் தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்குப் புறப்பட்ட பிறகு காணாமற் போனது. இந்நிலையில், நேற்று அருணாசலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.