ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டு வயது சிறுவன் பலி; கிராம மக்கள் கொந்தளிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறு வனை மீட்பதற்காக 110 மணிநேரம் நடந்த போராட்டம் நேற்று முடி வுக்கு வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சிங்ரூரில் விளையாடிக் கொண்டிருந்த பத் வீர் சிங் என்ற 2 வயது சிறுவன், 150 அடி ஆழமுள்ள ஆழ் துளைக் கிணற்றில் விழுந்தான். 

கடந்த 110 மணிநேரமாக சிறு வனை மீட்க முயற்சி நடந்து வந் தது. 9 அங்குல விட்டம்கொண்ட ஆழ்துளைக் கிணற்றின் 110 அடி ஆழத்தில் இக்குழந்தை சிக்கிக் கொண்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அரு கில் 36 அங்குல விட்டத்தில் பள் ளம் தோண்டப்பட்டது.

ஆனால் கடும் பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியில் பள் ளம் தோண்டுவதில் சிக்கல் எழுந் தது. 

மீட்புப் படையினர், மருத்துவக் குழு, கிராம மக்கள், அரசு அதி காரிகள் என ஏராளமானோர் அங்குக் கூடி மீட்புப் பணிக்கு உதவினர். 

பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்தச் சிறுவன் இருக்கும் பகுதி வரை அருகில் தோண் டப்பட்ட ஆழ்துளைக் கிணறு மூலம் நேற்று காலை அந்தச் சிறுவனை மீட்டனர். 

மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவனை மீட்க பல மணிநேரம் ஆனதால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்படைந்தனர். அதிகாரிகளுக்கும் அமைச்சர் களுக்கும் எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். உயிரிழந்த சிறு வனுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந் தர் சிங் உள்ளிட்ட பலரும் இரங் கல் தெரிவித்துள்ளனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என திரு ஜெய்சங்கர் கூறியுள்ளார். எஸ்டி படம்: ஜேசன் குவா

20 Sep 2019

ஸாகிர் நாயக்கைப் பற்றிய மகாதீரின் கூற்றை மறுத்துள்ள இந்தியா

சென்னையில் உள்ள ஒரு லாரி நிறுத்தத்தில் லாரிகள். படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

இந்தியா: லாரி, வாகன வேலைநிறுத்தத்தால் பரிதவித்த மக்கள்