மோடிக்கு பாகிஸ்தான் அனுமதி

மோடிக்கு பாகிஸ்தான் அனுமதி

1 mins read

புதுடெல்லி: காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்

படை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து பலாகோட் முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், தனது வான்வழிப் பாதையை மூடுவதாக அறிவித்தது. இதனால் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் சுற்றி போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்துத் தெரிவித்தார். அதோடு காஷ் மீர் பிரச்சினை பற்றி பேச தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தற்போது ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க செல்ல இருக்கும் மோடிக்குப் பாகிஸ்தான் வான்வழி பாதையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு பாகிஸ் தான் ஒப்புதல் அளித்தது.பாகிஸ்தானின் இந்த அணுகுமுறைக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் 13, 14ஆம் தேதிகளில் 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது.