பல கோடி ரூபாய் மோசடி; நகைக்கடை முன் குவிந்த மக்கள்

பல கோடி ரூபாய் மோசடி; நகைக்கடை முன் குவிந்த மக்கள்

2 mins read
Google News Preferred Icon

பெங்களூரு: வாடிக்கையாளர்களி டம் ஐநூறு கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகக் கூறப்படும் பெங்களூரு நகைகடை அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் ஐஎம்ஏ என்ற பெயரில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை யில் நகைச்சீட்டும் நடத்தப்பட்டு வந்தது.

இங்கு பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டித் தரப் படும் என்றும் பணத்திற்கு வட்டியு டன் சேர்த்துத் தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு இருந்தது.

இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த னர்.

இந்நிலையில், கடந்த 4 நாட் களாக கடை திறக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சந் தேகம் அடைந்தனர்.

இதனிடையே, மன்சூர்கான் பேசுவது போன்ற குரல்பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவியது.

அதில் "வாடிக்கையாளர்களி டம் பெற்ற தொகையில் ரூ.400 கோடியைக் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிடம் கொடுத் தேன். ஆனால் அவர் பணத்தைத் திருப்பி தர மறுக்கிறார்.

"எனக்கும் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மன்சூர்கான் தலை மறைவாகி விட்டதாகத் தகவல் பரவியதால் சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு திரண்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் 3 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக் கலாம் எனத் தெரிகிறது.

மன்சூர்கானுக்கு என்னவா யிற்று என்பது பற்றி எதுவும் தெரி யாத, அதேசமயம் அவர் குடும்பத் துடன் துபாய்க்குத் தப்பிச் சென் றிருக்கலாம் எனவும் கூறப்படுகி றது.

இதற்கிடையே, மன்சூர்கானின் குற்றச்சாட்டைக் காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார்.