'டயர்' வெடித்தும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

'டயர்' வெடித்தும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

1 mins read
6da75eb3-aede-487f-adfd-3a1d6928af9c
ஆய்வுக்குப் பின் விமானத்தின் ஒரு டயர் வெடித்திருந்தது தெரிய வந்தது.   படங்கள்: ஊடகம் -

ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டயர் ஒன்று நடு வானில் வெடித்த போதிலும் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வகையில் தரையிறக்கப்பட்டது.

மொத்தம் 108 பேருடன் நேற்று காலை 9 மணியளவில் அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கி யது. முன்னதாக துபாயில் இருந்து புறப்பட்ட போதே விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாக விமானிகள் தகவல் தெரிவித்திருந் தனர்.

இதையடுத்து தகுந்த பாது காப்பு ஏற்பாடுகளுடன் விமானம் தரையிறக்கப்பட்டது.