தொழிற்சாலை உள்கட்டமைப்பு கழகத் தலைவராக நடிகை ரோஜா நியமனம்

தொழிற்சாலை உள்கட்டமைப்பு கழகத் தலைவராக நடிகை ரோஜா நியமனம்

2 mins read
0108d2af-8d42-462c-8be4-78b1017be9c3
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜா படம்: ஊடகம் -

அமராவதி: சட்டப்பேரவை உறுப்பி னரும் நடிகையுமான ரோஜாவை ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக நியமித்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

இதையடுத்து ரோஜாவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந் துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையி லான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றதைய டுத்து அவர் முதல்வராகப் பொறுப் பேற்றார். மேலும் நாட்டிலேயே முதன்முறையாக ஐந்து துணை முதல்வர்களையும் நியமித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற் றிக்காக கடுமையாக உழைத்தவர் களில் ஒருவரான நடிகை ரோஜா, தாம் போட்டியிட்ட நகரி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக் கும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

எனினும் 25 அமைச்சர்களை நியமித்த ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனால் ரோஜா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தகவல் வெளியானது.

ஆனால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்­கட்டமைப் புக் கழகத்தின் தலை­வ­ராக ரோஜாவை நியமித்து உத்தர விட்டுள்­ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இது முக்கிய பொறுப்பு என்பதால் ரோஜாவும் அவரது ஆதரவாளர் களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதன் மூலம் அனுபவம் பெற்ற பிறகு ரோஜாவுக்கு அமைச்சரவை யில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க பாஜக முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.