மலிவாக 5ஜி சேவை வழங்க இந்திய அரசாங்கம் திட்டம்

மலிவாக 5ஜி சேவை வழங்க இந்திய அரசாங்கம் திட்டம்

1 mins read

புதுடெல்லி: 5ஜி சேவைகள் மலி வான கட்டணத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு திட்டமிடுகிறது.

5ஜி மற்றும் மின்னிலக்கச் சேவைகள் ஊரகப் பகுதிகளுக் கும் பரவ வேண்டுமென தொலைத் தொடர்பு ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இந்த ஏலம் மூலம் ஆறு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மத்திய அரசாங்கம் எதிர் பார்க்கிறது.

இதற்காக 3 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தலா இரண்டு கம்பி இல்லாத இணைய இணைப்புகள் மற்றும் கம்பி வழி அதிவேக இணைய இணைப்புகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.