டிக் டாக் செயலி: பையன் மீது குண்டு பாய்ந்தது

டிக் டாக் செயலி: பையன் மீது குண்டு பாய்ந்தது

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: டிக் டாக் செயலிக் காக உறவினர் ஒருவருடன் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்சி கொடுத்த 17 வயதுப் பையன் குண்டடிபட்டு மாண்டார்.

அந்தப் பையனும் அவனுடைய நான்கு குடும்ப உறுப்பினர்களும் மகாராஷ்டிராவில் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது உறவினர்களில் ஒருவர் எதிர் பாராதவிதமாக சுட்டுவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.

இரண்டு பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். இதர இரண்டு பேர் இன்னமும் பிடிபட வில்லை. கைதானவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும்.

சம்பவம் நிகழ்ந்ததும் பயந்து போன அந்த நால்வரும் ஹோட் டல் ஊழியரை மிரட்டிவிட்டு வெளியே ஓடியதாகவும் போலிஸ் தெரிவித்தது.