மழையே இன்றி வறட்சியில் டெல்லி 

புதுடெல்லி: இந்தியாவில் 2019 ஜூன் 1 முதல் நாட்டில் மழையே கண்டிராத ஒரே மாநிலம் டெல்லி தான் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக் கப்பட்டு உள்ளது.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 13ஆ-ம் தேதி வரையிலான முதல் இரு வாரங்களில் பொது வாக தலைநகர் புதுடெல்லியில் சராசரியாக 14.1 மிமீ மழை பெய் யும். 2011 முதல் இப்படியே நிகழ்ந்து வந்துள்ளது.

ஆனால், நடப்புப் பருவத்தில் மழையே பெய்யாததால் அங்கு அனல் காற்று அதிகளவில் வீசி வருவதாகவும் பாலம் என்ற இடத் தில் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது.

இருந்தாலும், வரும் திங்கட் கிழமைக்குப் பிறகு தலைநகரில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை பெய்த பருவமழை சுமார் 42% குறைந்து இருப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு உள் ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் சராசரியைவிட அதிக மழை பெய் துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.

மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை போதிய அளவுக்குப் பெய்ய வில்லை. மத்தியப்பிரதேசத்தில் 88% மழை குறைந்துவிட்டதாக ஆய்வு மையம் கவலை தெரிவித் தது. இந்நிலை நீடித்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று மையம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லியில் சஞ்சை காலனி என்ற இடத்தில் மக்கள் ஒரு குடம் தண்ணீருக்குப் படாதபாடுபடுகிறார் கள். அந்த நகரின் பல இடங்களில் அன்றாட காட்சி இது. மாநகர நிர்வாகமும் தண்ணீரை விநியோகிக்க பெரும்பாடுபடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!