கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 வயது நபர் கைது

கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 வயது நபர் கைது

1 mins read

கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 43 வயது சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லோரோங் 1 தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டின் மீது காபி ஊற்றப்பட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தனர்.

காவல்துறையின் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலிசார், சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தீவு முழுவதும் பல இடங்களில் இதே போன்று தொந்தரவு களில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.

சந்தேக நபர் மீது முறைப்படி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.