அமெரிக்க பொருட்களுக்கு வரி: இந்தியா பதிலடி

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘வால்நட்’ உட்பட 29 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது.

இந்தப் புதிய வரி விதிப்பு ஜூன் 16ஆம் தேதியிலிருந்து (இன்று) அமலாகும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படும் என்றும் இந்திய அரசு கூறியிருந்தது.

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் முடிவை இதற்கு முன்னர் இந்தியா பல முறை ஒத்திவைத்தது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை முறையே 25 விழுக்காடாகவும் 10 விழுக் காடாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அதிகரித்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி தரும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘வால்நட்’ மற்றும் பருப்பு வகைகள், இரும்பு, உருக்குப் பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. இது ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதியி லிருந்து அமலுக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இரு நாட்டு அதிகாரிகளும் வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய தால் வரி அதிகரிப்பை அமல் படுத்தும் நடவடிக்கையை இந்தியா செப்டம்பர் 18, நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி போட்டது. பேச்சு வார்த்தை யில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

உருக்கு, அலுமினியம் ஆகிய வற்றின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத் தது. ஆனால் தனது முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும் இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு இந்தியா வுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வர்த்தக சலுகையையும் ரத்து செய்தார்.

இந்த நிலையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித் துள்ளது.

இதன்படி வால்நட் மீதான வரி 30 விழுக்காட்டிலிருந்து 120 விழுக்காடாகவும் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டை கடலை, மசூர் உள்ளிட்ட பருப்பு வகைகள் மீதான வரி 30 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாகவும் சில வகை பிளாஸ்டிக் பொருள்கள் மீதான வரி 7.5 விழுக்காடாகவும் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் சோதனைப் பொருள்கள் மீதான வரி பத்து விழுக்காடாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பருப்பு வகைகள், இரும்பு, எஃகு பொருள்கள், ஆப்பிள், அலாய், துருப்பிடிக்காத இரும்புப் பொருள்கள், குழாய்கள், ஸ்க்ரூ உட்பட 29 பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!