குண்டூர்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு நேரடியாக வரும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கிடையே குண்டூரில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும் நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.
அப்போது அவர் குழந்தைகளின் கையைப் பிடித்து எழுத்துகளை எழுத கற்றுக் கொடுத்தார்.
பள்ளிகளுக்குச் செல்லாத பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளி களுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும். இந்தத் திட்டம் வருகிற குடியரசு தினத்தில் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் கூறியுள்ளார்.

