இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்

1 mins read
a1703e42-5c81-4149-924a-ddcaae78fc76
மும்பையில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப் -

மும்பை: ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். மும்பையில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் அவர் வாகை சூடினார்.

ஆண்டுதோறும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டி இம்முறை மும்பையில் நடைபெற்றது. வண்ணமயமான நிகழ்வாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பல அழகிகள் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றில் 22 வயதான சுமன்ராவ் முதலிடம் பெற்று அழகியாக வாகை சூடினார். இதையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் (மிஸ் வேர்ல்டு) இந்தியா சார்பில் சுமன்ராவ் பங்கேற்பார்.

இம்முறை தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா இரண்டாமிடம் பெற்றுள்ளார். சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, மனி‌ஷி ‌ஷில்லார் ஆகியோர் உலக அள வில் இந்தியாவைப் பிரதிநிதித்து அழகிப் பட்டம் பெற்றுள்ளனர்.