மேற்கு வங்க மாநில மருத்துவர்கள் போராட்டம் முடிவுற்றது

2 mins read
0785f4e2-f3f6-4b2a-a29f-83478477011c
மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் உள்ள வட மருத்துவக் கல்லூரிக்கு படுத்த நிலையில் நோயாளி ஒருவர் கொண்டு செல்லப்படுகிறார். பின்னணியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள். நாடு முழுவதும் மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தினால் ஏராளமான நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் மேற்கு வங்க மாநி லத்தை சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத் துவர்கள் நேற்று போராட்டம் நடத் திய நிலையில், 24 மருத்துவப் பிரதிநிதிகள் கொண்ட குழுவின ருடன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி யதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணியிடத்தில் மருத்துவர் களையும் மருத்துவப் பணியாளர் களையும் பாதுகாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த திருவாட்டி மம்தா ஒப்புக்கொண்டதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, மேற்கு வங்க மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

மேற்கு வங்கத்தின் தலைநக ரான கோல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இம்மாதம் 10ஆம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த இரு இளநிலை மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் மருத்து வர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவச் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி நாடு முழு வதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.

மேற்கு வங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசிய முதல்வர் மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டும், மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் மற்றும் மருத்துவ மனைகள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக் குழுவினர் முன் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊடகங்கள் முன்னிலையில் மட்டுமே முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

இந்தநிலையில், அந்த நிபந்த னையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மம்தா, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மேற்கு வங்க மருத்துவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று மாலை தலைமைச் செயல கத்தில் அவர் முன்வந்ததாக தெரி விக்கப்பட்டது.

பல்வேறு மருத்துவக் கல்லூரி களின் சார்பில் தலா இரு பிரதி நிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இது குறித்து மேற்கு வங்க மாநில மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில் ''உங்கள் கோரிக்கை குறித்துப் பரிசீலிக் கப்படும். சிறந்த தீர்வுகாண முற்படுகிறோம். கூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதுடன், அது குறித்து அரசின் பதிலும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும்'' எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.