மொய்லி: உட்கட்சிப் பூசல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக

மொய்லி: உட்கட்சிப் பூசல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக

2 mins read

புதுடெல்லி: காங்கிரசில் நிலவும் உட்கட்சிப் பூசல்களை ராகுல் காந்தி இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்க ளுள் ஒருவரான வீரப்ப மொய்லி வலியுறுத்தி உள்ளார். இவ்விஷயத் தில் சிறிதளவும் கருணை காட்டக் கூடாது என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்த நடவடிக்கையை மேற் கொண்டால் மட்டுமே ராகுல் காந்தியை ஆற்றல் மிக்க ஒரு தலைவராக மக்கள் கருதுவார்கள் என்றும், காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும் என்றும் மொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விய டைந்ததற்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகியது பாராட்டுக் குரிய விஷயம்தான். ஆனால் அந்த தோல்விக்கு மாநில தலைவர் களும், மாநில பொறுப்பாளர்களுமே காரணமாவர். கட்சியின் தலைவர் அல்ல.

"கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இல்லை. அதனால் அவர்கள் துவண்டுவிடவில்லை. அவர்கள் மீண்டும் 2014இல் ஆட் சிக்கு வந்தார்கள். எனவே, குறு கிய காலத்தில் எதையும் முடிவு செய்துவிடக் கூடாது," என்று வீரப்ப மொய்லி சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே போல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட் டுள்ள பிரியங்கா காந்திக்கு கூடு தல் அவகாசம் வழங்கப்பட வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

காங்கிரசில் இளம் நிர்வாகிகள் உள்ளனர் என்பதை நாட்டுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் மொய்லி கூறி உள்ளார்.

"கட்சியை வலுப்படுத்த ஓர் அறுவை சிகிச்சை தேவைப்படு கிறது என்பதே என் கருத்து. கட்சியின் ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகி களைத் தேர்வு செய்து கட்சிக்குள் இளம் ரத்தத்தைச் செலுத்த வேண் டும். இந்த அதிரடி மாற்றங்களை ராகுல் காந்தியால் மட்டுமே செய்ய முடியும்," என்று வீரப்ப மொய்லி மேலும் தெரிவித்துள்ளார்.