புதுடெல்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' எனும் ஏற் பாட்டுக்கு ஆதரவு தெரி வித்துள்ள நிலையில், இது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகளும் தவறாமல் பங் கேற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களவை, சட்டப்பேர வைகளுக்கு ஒரே சமயத் தில் தேர்தல் நடத்த வேண் டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாஜக இதை ஆதரிக்கிறது.
இந்நிலையில் இது குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா தொடர்பாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சுமூகமாக நடத்துவது குறித்தும் மக்கள் நலன் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தலைவர் இல்லாத கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம் எனப் பிரதமர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் காங்கிரசை மறைமுகமாக விமர்சித்தி ருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

