புதுடெல்லி: உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், டெல்லி சுங்கத்
துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். இச்சம்பவம் கடந்த மே 3ஆம் நிகழ்ந்துள்ளது. தனது உறவினர் ஒருவரது மருத்துவ சிகிச்சையின் பொருட்டு அந்தப் பெண் இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது கண்காணிப்புக் கேமரா இல்லாத அறைக்கு அவரை அழைத்துச் சென்ற சுங்கத்துறை கண்காணிப்பாளர், சுமார் அரைமணி நேரம் கழித்தே அப்பெண்ணை வெளியே அனுப்பியுள்ளார். அப்பெண்ணை விசாரித்த போது பெண் அதிகாரி யாரும் உடனிருக்கவில்லை.
இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு வந்த புகார் கடிதத்தையடுத்து கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் பாலியல் புகாரில் மற்றொரு அதிகாரியும் சிக்கியுள்ளார்.

