இரு தினங்களில் வெயிலுக்கு 113 பேர் பலி

இரு தினங்களில் வெயிலுக்கு 113 பேர் பலி

1 mins read
Google News Preferred Icon

பாட்னா: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தொடங்கி யுள்ள நிலையில், பீகாரில் மட்டும் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

அங்கு கடந்த இரு தினங்களில் மட்டும் வெயில் கொடுமையால் 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிக பட்சமாக அவுரங்காபாத் மாவட் டத்தில் மட்டும் 36 பேரை காவு கொண்டுள்ளது வெயில்.

இந்நிலையில் வெயிலுக்குப் பலியானோர் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது.

இதற்கிடையே பீகாரில் மூளைக் காய்ச்சலால் பலியான குழந்தை களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான குழந்தைகள் ரத்தத்தில் தாழ் சர்க்கரை நிலை காரணமாக இறந்திருக்கலாம் எனக் கருதப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். குழந்தைகளை பறி கொடுத்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக அளிக்கப் படும் என பீகார் அரசு அறிவித் துள்ளது.

ஜூன் 1ஆம் தேதியில் இருந்து இதுவரை 197 குழந்தைகள் மருத் துவனையில் அனுமதிக்கப்பட் டதாகவும், அவர்களில் 91 குழந்தைகள் திடீர் மூளைத்திசு அழற்சியால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகா ருக்கு வருகை தந்த மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.